மாணவர்களே போட்டிக்கு தயாரா? லோகோ ரெடி பண்ணா 25,000 ருபா ! அழைக்கும் பள்ளிக்கல்வித்துறை;

நம் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பல மாநிலங்களில் ஆன்லைன் வகுப்புகள் பெருவாரியாக நடத்தப்பட்டு வருகின்றன.ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு ஓரளவிற்கு பிரயோஜனமாக காணப்படுகிறது என்றாலும் கூட பல நேரங்களில் இவை மாணவர்கள் மத்தியில் மன அழுத்தத்தை உருவாக்குவதாக காணப்படுகிறது.பள்ளிக்கல்வித்துறை

இந்த நிலையில் தமிழக அரசு “இல்லம் தேடி கல்வி” என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நம் தமிழகத்தில் பரபரப்பாக தயாராகிறது.

இந்த இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக அமையும்.

இந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு ஒரு போட்டியை வைத்துள்ளது. அந்த போட்டியில் வென்றால் பரிசுத் தொகையும் அறிவித்துள்ளது.

அதன்படி இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கான லோகோவை உருவாக்கும் அவர்களுக்கு தலா 25,000 ரூபாய் பரிசு என்று அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.

இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கான லோகோ உருவாக்க மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை உருவாக்கியுள்ளது பள்ளிக்கல்வித்துறை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment