ஒரே வீட்டில் 2500 சிம் கார்டுகள்: கேரள தம்பதிக்கு போலீசார் வலைவீச்சு!

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வாடகை வீட்டில் 2500 சிம் கார்டுகளை பதுக்கி பி.எஸ்.என்.எல் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்திய கேரள தம்பதியினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள வைக்கோல் தொட்டி ஒன்றின் வீடு ஒன்றில் கேரளாவை சேர்ந்த பஷீர் மற்றும் சஜீனா தம்பதியினர் சில மாதங்களுக்கு முன் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர்.

ஒரே வீட்டில் 2500 சிம் கார்டுகள்: கேரள தம்பதிக்கு போலீசார் வலைவீச்சு!

இவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏராளமான அழைப்புகள் சென்றதாக கூறப்படுகிறது. அதே சமயம் வருவாய் இழப்பு ஏற்பட்டதை அடுத்து சந்தேகம் அடைந்த பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது 2500 சிம் கார்டுகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதே போல் வெளிநாடுகளுக்கு அதிக அழைப்புகள் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

மீண்டும் சோகம்! ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒரு உயிர்பலி!

மேலும், தலைமறைவாக உள்ள கேரள தம்பதியினரை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.