News
கச்சத்தீவு செல்ல 2500 பேருக்கு அனுமதி
வருடா வருடம் இலங்கையின் கச்சத்தீவில் நடக்கும் திருவிழாவுக்கு இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் செல்வர் அடுத்த நாடு என்பதால் பக்தர்கள் செல்வதற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் திருவிழாவுக்கு செல்பவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் வீராராகவ ராவ் தெரிவித்தார். இந்தாண்டு 63 விசைப்படகுகள் மூலம் 2,200 பேர், 15 நாட்டுப்படகுகள் மூலம் சுமார் 225 பேர் முன்பதிவு செய்துள்ளனர். நாட்டுப்படகில் தலா 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
விசைப்படகுகளின் நீளத்துக்கு நிகரான நாட்டுப்படகுகள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளன. கச்சத்தீவு செல்லும் படகுகளின் உறுதித்தன்மை, பாதுகாப்பு அம்சங்கள், தீத்தடுப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்ட பிறகே பக்தர்களை ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்படும். கச்சத்தீவு செல்வோர் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு கடலோர காவல் படையின் பாதுகாப்போடு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.
