27 சதவீத இட ஒதுக்கீடு: பெரியாருக்குக் கிடைத்த காணிக்கை-ஸ்டாலின்;

சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத மருத்துவ இட ஒதுக்கீடு சரியானது என்று கூறி உறுதி அளித்திருந்தது. இது தமிழக அரசுக்கும் திமுக அரசுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று வழக்கை வாதாடிய மூத்த வழக்கறிஞர் கூறியிருந்தார்.

Periyar death anniversary

இதன் மத்தியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த 27 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பு பெரியாருக்குக் கிடைத்த காணிக்கை என்று கூறியுள்ளார். அதன்படி 27 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தந்தை பெரியாருக்குக் கிடைத்த காணிக்கை என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

பெரியாரின் சமூகநீதி தத்துவத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட காலம் உருவாகியுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இந்தியாவுக்கே சமூகநீதியை உருவாக்கி கொடுக்கும் பணியை நாம் செய்து வருகிறோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் கொண்டுள்ளார்.

27 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக நாம் எடுத்த சட்டரீதியிலான முயற்சி தான் அகில இந்திய அளவில் மாணவர்களுக்கு இனிப்பு செய்தியாக வழங்கியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment