சென்னை டூ தஞ்சை 25 வரவேற்பு! பக்கா பிளான்: ஒரு வார சுற்றுப்பயணம்!!

அதிமுக கட்சியில் தற்போது மிகப்பெரிய குழப்பம் உருவாகி உள்ளது. ஏனென்றால் சசிகலாவின் வருகையை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பலரும் இரண்டாக பிரிந்துள்ளனர். சசிகலாவும் ஒருவார காலத்திற்கு தென் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.சசிகலா

அதன்படி இன்றைய தினம் அவர் சென்னை திநகரின் தன் வீட்டிலிருந்து ஒரு வார கால சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தார், அவருடன் இளவரசியும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலாவதாக சென்னையிலிருந்து தஞ்சை புறப்பட்டு செல்கிறார்.

அப்படியே மதுரை ராமநாதபுரத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து தஞ்சை வரை மட்டும் 25 இடத்தில் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா நாளைய தினம் டிடிவி தினகரனின் மகளின் வரவேற்பு விழாவில் கலந்து கொள்கிறார். இருபத்தி எட்டாம் தேதி மதுரை செல்லும் சசிகலா கோரிப்பாளையத்தில் ஆதரவாளர்களை சந்திக்க உள்ளதாகவும், மருது சகோதரர்கள், முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

29ஆம் தேதி ராமநாதபுரம் செல்கிறார் சசிகலா. முப்பதாம் தேதி பசும்பொன் செல்கிறார்.மறுநாளில் தஞ்சை செல்லும் சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக அதிருப்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment