கொரோனா தடுப்பு பணியின்போது உயிரிழந்த இரண்டு தூய்மைப் பணியாளர் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் நிதி ஒதுக்கீடு!

கடந்த இரண்டு வருடங்களாகவே நம் உலகமே நோய்த்தொற்றுக்குள் சிக்கி காணப்படுகிறது. இந்தப் பேரிடர் காலத்தில் மக்களுக்கு உறுதுணையாக இருந்து போராடியவர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள். இவர்கள் தங்கள் உயிரினும் பெரிதன கண்டுகொள்ளாமல் மக்கள் உயிரை காக்க வேண்டும் என்பதற்காக அயராது உழைத்தனர்.

கொரோனா

ஆயினும் அவ்வப்போது இவர்கள் மத்தியிலும் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்டது. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண தொகையாக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் இரண்டு தூய்மைப் பணியாளர் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த 2 தூய்மைப் பணியாளர் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்த தஞ்சை மௌனதாஸ், விருதுநகர் ராஜேந்திரன் குடும்பத்துக்கு நிதி ஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிதியை காசோலை அல்லது அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கு மூலம் வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment