அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை!

தமிழகத்தில் தற்போது பெருவாரியான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இவை மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் பல மாவட்டங்களில் மழைநீர் வெள்ளம் போல சாலைகளில் செல்கிறது.வானிலை மையம்

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில்  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்த படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

திருவாரூர்,புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கரூரில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர்,ராணிப்பேட்டை ,கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment