குடகனாறு அணை மதகுகளை புதுப்பிக்க ரூபாய் 28 கோடியில் திட்டம்!: அமைச்சர் செந்தில் பாலாஜி;

நம் தமிழ்நாட்டில் தற்போது மின்வாரியத் துறை அமைச்சராக உள்ளார் செந்தில் பாலாஜி.அவர் சட்டப்பேரவையில் மின்சார துறை பற்றி புள்ளிவிபரங்களோடு அறிக்கை தாக்கல் செய்து பேசியது பலரையும் வியக்க வைத்தது.

செந்தில்பாலாஜி

இந்த நிலையில் குடகனாறு அணை மதகுகளை புதுப்பிக்க ரூபாய் 28 கோடியில் திட்டம் உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடகனாறு அணையில் மேலும் ஐந்து மதகுகளை சீரமைக்க ரூபாய் 28 கோடியில் திட்டம் உள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

குடகனாறு அணையில் நீர்மட்டத்தை 27 அடியாக அதிகரிக்க  ஐந்து மடல்களைக் புதுப்பித்தால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். குடகனாறு அணை விவசாயிகளுடன் ஆய்வு செய்த பின்னர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து இவ்வாறு பேட்டி அளித்தார்.

வெள்ளியணை குளத்துக்கு நீர் விநியோக கால்வாயில் 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு கான்கிரீட் அமைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே தவிர ஊதியம் வழங்குவதில் தடையேதும் இல்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment