Connect with us

அதிர்ச்சி!! மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவர்களுக்கு மயக்கம்!!

580007

தமிழகம்

அதிர்ச்சி!! மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவர்களுக்கு மயக்கம்!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. குறிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் பயின்று வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் பள்ளியில் தினமும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன் படி, இன்றைய தினத்திலும், வழக்கம்போல மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அப்போது மதிய உணவு சாப்பிட்ட 24 பேர் திடீரென மயக்கமடைந்துள்ளதால், பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து மயக்கமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் கூறப்படுகிறது. மேலும், மாணவர்கள் மயக்கம் அடைந்தது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top