Connect with us

போலீஸ் போல் நடித்து ₹24 லட்சம் வழிப்பறி-ஆறு பேர் கைது!!

லட்சம்

தமிழகம்

போலீஸ் போல் நடித்து ₹24 லட்சம் வழிப்பறி-ஆறு பேர் கைது!!

தமிழ்நாட்டில் தினம் தோறும் கொள்ளை நிகழும் சம்பவம் நடந்து கொண்டுதான் வருகிறது. ஏனென்றால் பலரும் நூதனமான முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நூதனமான முறையில் ஆறு பேர் கொண்ட கும்பல் ரூபாய் 24 லட்சத்தை வழிபறி செய்ததாக தெரிகிறது.

அவர்கள் ஆறு பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பூக்கடை பகுதியில் கடந்த பத்தாம் தேதி பஷீர் அகமது என்பவரிடம் ரூபாய் 24 லட்சம் பறித்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நரேஷ், காதர் மைதீன், தியாகராஜன், பைசல் முகமது, சாருக் தாஹா, இருதய ஆனந்த் பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஷ் என்று கூறி திருவல்லிக்கேணியை சேர்ந்த பஷீர் அகமது என்பவரிடம் கடந்த பத்தாம் தேதி 24 லட்சம் ரூபாய் இவர்கள் வழிப்பறி செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேரிடம் இருந்தும் ரூபாய் 17.50 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தது போலீஸ். மீதம் உள்ள தொகையைப் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்திக் கொண்டு  வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top