சென்னை உள்பட 23 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை

பள்ளிகள் விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது என்பதும் இன்னும் ஒரு சில நாட்களுக்கு குறிப்பாக சென்னை உள்பட வட மாவட்டங்களுக்கு 5 நாட்களுக்கு கனமழை உள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு ஏற்கனவே பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மொத்தம் 23 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள 23 மாவட்டங்களில் பின்வருமாறு: சேலம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், நாகை, திருச்சி, விழுப்புரம், தஞ்சை, கடலூர்,மயிலாடுதுறை, தி.மலை, கரூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print