
தமிழகம்
23 மாவட்டங்களில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.!!
தென்மேற்கு பருவமழை காலத்திலேயே நம் தமிழகத்தில் மழை நீரானது சற்று அதிகமாக கிடைத்துள்ளது. அதிலும் காவிரி நீரானது தினம்தோறும் அதிகளவு தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் ஐம்பதாயிரம் கன அடி நீரினை கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்து விட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, நீலகிரி போன்ற மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த மாவட்டங்களில் மீட்பு படை அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பிட்ட 23 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலியிலும் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
