தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதனால் தமிழகத்தில் உள்ள பல அணைகள் நிரம்பி வந்தன. குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கு நீராதாரமாக காணப்படுகிற மேட்டூர் அணையில் அதிக அளவுக்கு உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
இது தமிழகத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுவது மேட்டூர் அணை. மேட்டூர் அணையில் தற்போது 22 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. அதன்படி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
அணையிலிருந்து சுரங்க மின் நிலையம் வழியே 17 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. 16 கண் பாலம் வழியே வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கனஅடி நீரும் தண்ணீர் நீர் திறந்துவிடப்படுகிறது
மேட்டூர் அணை நீர்மட்டம் 120.10 அடி அளவில் உள்ளது. இதனால் அங்கு நீர் இருப்பானது 93.53 டிஎம்சி ஆக காணப்படுகிறது. அதோடு மேட்டூர் அணையில் வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கன அடி நீர் வரத்து உள்ளது.