இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக விளையாடி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 153 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் 224 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியால் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா மிக அபாரமாக பேட்டிங் செய்து 162 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.