இந்தியாவில் 22 யூடியூப் சேனல்கள் முடக்கம்..! காரணம் என்ன ?
இந்தியாவில் இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களைப் பதிவிட்டு வந்ததாக கூறி 22 யூடியூப் சேனல்கள் முடக்கம் செய்துள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீரில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் உக்ரைன் நாட்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்து தவறான போலியான செய்திகளை சுமார் 22 யூடியூப் சேனல்கள் பரப்பி வந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு மற்றும் சட்டம், ஒழுங்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் 18 யூடியூப் சேனல்கள் இந்தியாவில் இருந்து செயல்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 4 யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானை இருந்து செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 3 டுவிட்டர் கணக்குகள், ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு செய்தி இணையதளமும் முடக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதுவரையில் சுமார் 78 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
