அதிர்ச்சி! கர்ப்பிணி ஆசிரியர் மீது தாக்குதல்.. 22 மாணவர்கள் சஸ்பெண்ட்!!

அசாமில் 5 மாத கர்ப்பிணி ஆசிரியரை 22 மாணவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சில தினங்களுக்கு முன் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. அப்போது 5 மாத கர்ப்பிணியான வரலாற்று ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்ட மாணவர்களை குறித்து பெற்றோர்களிடம் புகார் அளித்துள்ளார்.

உஷார்! அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில்… வானிலை மையம் எச்சரிக்கை!

இதனால் ஆத்திரமடைந்த மாணவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி ஆசிரியை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது பள்ளியில் இருந்த ஊழியர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர்.

அவர்களையும் மாணவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சம்பவம் குறித்து விசாரணை நடத்த அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று முதல்! சில்லறை பண பரிவர்த்தனை.. 4 நகரங்களில் அறிமுகம்!!

மேலும், தாக்குதலில் ஈடுப்பட்ட 22 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் வீட்டிற்கு அனுப்பியுள்ளது. அதோடு மாணவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.