வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு மாதமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் கடந்த பல நாட்களாக பள்ளிகள் கல்லூரிகள் கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் இன்றும் பல மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்பதையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதையும் தற்போது பார்ப்போம்
இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்: திருவண்ணாமலை, கடலூர், ராணிப்பேட்டை, அரியலூர், வேலூர், பெரம்பலூர்
இன்று பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், திண்டுக்கல், விருதுநகர் மற்றும் கள்ளக்குறிச்சி