நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘குமரி முதல் சென்னை வரை’ 22 நாட்கள் பரப்புரை!! பெரியார் திடலில் நிறைவு விழா;
நம் தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து விதமான தீர்மானங்களை நிறைவேற்றி கொண்டு வருகிறது. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி நீட் தேர்வை எதிர்த்து குமரி முதல் சென்னை வரை பரப்புரை மேற்கொண்டார். அவர் ஏப்ரல் 3ஆம் தேதி பரப்புரையை தொடங்கி இன்றைய தினம் நிறைவு செய்துள்ளார்.
இதனால் நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த நிறைவு விழா வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மேடையில் உரையாற்றி கொண்டு வருகிறார்.
அதன்படி பெரியார் திடலுக்கு வந்திருப்பது புதிதல்ல என் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். திராவிட கருத்தியலின் உயிர் வடிவமாகத்தான் கி.வீரமணி அவர்களைப் பார்க்கிறேன் என்று பேசினார்.
திராவிடர் கழக மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இவ்வாறு பேசிக் கொண்டு வருகிறார். பெரியாரும் அவரது கொள்கையும் தான் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை இயக்குகிறது என்று ஸ்டாலின் கூறினார். பெரியார் போல எந்த தலைவரும் எந்த இனத்திற்கும் கிடைத்தது இல்லை என்றும் பேசுகிறார்.
