தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது, அந்தப்படி நம் தமிழகத்தில் முதல்வராக முக ஸ்டாலின் மற்றும் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பலரும் அந்தத் துறையில் சிறந்தவர்களாக காணப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது தமிழகத்தில் புதிய திட்டங்களும் கொண்டுவரப்படுகின்றன. அதன் வரிசையில் தற்போது 218 கோடியில் 4 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட உள்ளதாக தகவல். மேலும் மணப்பாறை காவேரிராஜபுரம் கோட்டூர் மற்றும் சக்கிமங்கலம் ஆகிய நான்கு இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது,
மேலும் மதுரை திருச்சி செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 394 ஏக்கர் பரப்பளவில் நான்கு புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளன. நீலகிரியில் உள்ள 10 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் நவீனமயமாக்கம் என்றும் தகவல் கிடைத்துள்ளது. சிட்கோ மூலம் செங்கல்பட்டில் சிற்பக் கலைஞரின் மேம்பாட்டிற்காக தொழில் பூங்கா அமைக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சிற்ப கலைஞர்கள் தொழில் பூங்கா 19 ஏக்கர் பரப்பளவில் 232 கோடியில் உருவாக்கப்படும் என்று அன்பரசன் கூறியுள்ளார். மேலும் ரூபாய் 17.5 கோடியில் 585 சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பாட்டிற்காக அடிப்படை கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கோவை சொலவம்பாளையில் 18.13 கோடி மதிப்பில் 9.06 கோடி அரசு மானியத்துடன் புதிய தனியார் தொழில் பற்றி உருவாக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.