Connect with us

இலங்கை அமைச்சர் முதலமைச்சருடன் திடீர் சந்திப்பு; நாகை மீனவர்கள் 21 பேர் விடுதலை!

மீனவர்கள்

செய்திகள்

இலங்கை அமைச்சர் முதலமைச்சருடன் திடீர் சந்திப்பு; நாகை மீனவர்கள் 21 பேர் விடுதலை!

இலங்கை அமைச்சர் முதலமைச்சருடன் திடீர் சந்திப்பு; நாகை மீனவர்கள் 21 பேர் விடுதலை!

நம் தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றால் பெரும்பாலும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர். அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசிடம் தமிழகத்தில் உள்ள அனைவரும் கடிதத்தின் மூலமாக வலியுறுத்தி கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாகை மீனவர்கள் 21 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 21 பேர் விடுதலை செய்யப்பட்டுவுள்ளனர்.

நாகை மீனவர்களை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட 21 மீனவர்களும் இன்னும் ஓரிரு நாளில் தாயகம் திரும்ப உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாகை மாவட்ட மீனவர்கள் 21 பேரை ஜனவரி 31ஆம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு உள்ள நிலையில் இலங்கை அமைச்சர் இன்று முதலமைச்சருடன் சந்தித்து பேசிக் கொண்டு வருகிறார்.

அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் சந்தித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் துணை தலைவர் செந்தில் தொண்டைமான் முதல்வருடன் சந்தித்துள்ளார். இலங்கை தமிழர் நலன், மீனவர் பிரச்சினை குறித்து முதலமைச்சருடன் இளைஞர்கள் தலைவர்கள் விவாதித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top