Connect with us

21 நாள் முடக்கம்- வீட்டில் இதை எல்லாம் செய்யுங்க

News

21 நாள் முடக்கம்- வீட்டில் இதை எல்லாம் செய்யுங்க

21 நாள் முடக்கம் என்பது அனைவருமே கடைபிடித்தே ஆக வேண்டிய ஒன்றாக உள்ளது. எனக்கு பிஸ்னஸ் இருக்கு வேலை இருக்குன்னு காலில் ரெக்கையை கட்டிக்கிட்டு பறந்தவங்க எல்லாம் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

2f2614182a3943f011402983d0f6eac3-2

டிவி சேனல்களை திறந்தால் கொரோனா அப்டேட் அதிகம் கொடுத்து பயப்பட வைக்கும் நிலை உள்ளது.

எதையும் பார்த்து பயப்படும் நிலை உள்ளது. அதை எல்லாம் தூக்கி வைத்து விட்டு 21 நாளும் குழந்தைகளுடன் செலவிடுங்கள். வயதான அப்பா,அம்மாவிடம் மனம் திறந்து பேசுங்கள்.

இன்று காலையில் சமூக வலைதளத்தில் வலம் வரும்போது ஒரு பதிவு பார்க்க நேர்ந்தது வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் சேர்ந்து ஒருவர் பூரி செய்கிறார்.குழந்தைகளுக்கு பிடித்தது போல மாவு தேய்த்து அதை ஹார்ட் போல எல்லாம் வெட்டி எடுத்து பூரி போட்டு கொடுக்கிறார்.

இது எல்லாம் சின்ன சின்ன நிகழ்வுகள்தான் இது போல விசயங்கள் உங்கள் , மனைவி குழந்தைகளை சந்தோஷப்படுத்தும் என்பது உண்மை.

சிறு குழந்தைகளுக்கு கதைகள் சொல்லுங்கள், பஞ்ச தந்திரக்கதைகள், விக்கிரமாதித்தனும் வேதாளமும் இது போல கதைகளை சொல்லி கொடுங்கள், அது போல புத்தகங்களை படிக்க கொடுங்கள்.

இப்போதிருக்கும் குழந்தைகள் பல வீட்டுக்குள் வந்த உடன் அப்பாவின் ஆண்ட்ராய்ட் மொபைலை வாங்கி பார்ப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.

வீட்டுக்குள் உட்கார்ந்து விளையாடும் பழமையான {உதாரணம்: திருடன் போலீஸ்} இது போல பழமையான விளையாட்டுக்களை அனைவரும் ஒன்றாக கூடி விளையாடுங்கள்.

கொரானா பற்றிய செய்திகளை அதிகம் பார்த்து மனதை கெடுத்து கொள்ளாதீர்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top