Connect with us

208 வாக்குறுதிகள் நிறைவேற்றம்!! அதிமுக ஆட்சியின் வாக்குறுதிகளும் பரிசீலிக்கப்படும்!!

stalin new16

தமிழகம்

208 வாக்குறுதிகள் நிறைவேற்றம்!! அதிமுக ஆட்சியின் வாக்குறுதிகளும் பரிசீலிக்கப்படும்!!

208 வாக்குறுதிகள் நிறைவேற்றம்!! அதிமுக ஆட்சியின் வாக்குறுதிகளும் பரிசீலிக்கப்படும்!!

நேற்றைய தினம் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த பத்து மாதங்களில் எந்த ஒரு மாநில அரசும் செய்யாத சாதனையை திமுக செய்துள்ளது என்று பேசினார்.

ஏனென்றால் பலரும் திமுக ஆட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் பற்றி விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர். அதுவும் குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை பற்றி தினம்தோறும் விமர்சனம் செய்து கொண்டு வருகின்றன.

இந்தநிலையில் 208 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 537 வாக்குறுதிகள் இன்னும் நிலுவையில் தான் உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

திமுகவின் 208 தேர்தல் வாக்குறுதிகள் அரசின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள் பரிசீலிக்கப்பட்டு கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை ஆக்கபூர்வ நினைவூட்டல் ஆக எடுத்துக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top