எல்லா லீவும் சனி, ஞாயிறில் போச்சே: 2022 விடுமுறை குறித்து புலம்பும் அரசு ஊழியர்கள்

2022ஆம் ஆண்டு மொத்தம் இருபத்தி மூன்று நாட்கள் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒன்பது நாட்கள் சனி ஞாயிறு விடுமுறை நாளில் வருவதால் அரசு ஊழியர்கள் புலம்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக பொங்கல் தினத்திற்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் நிலையில் அடுத்த ஆண்டு சனி ஞாயிறு இரண்டு நாட்களில் திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2022ஆம் ஆண்டில் அரசு பொது விடுமுறை குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது

1. ஆங்கிலப் புத்தாண்டு- 01.01.2022- சனிக்கிழமை

2. பொங்கல்- 14-01-2022- வெள்ளிக்கிழமை

3. திருவள்ளுவர் தினம்- 15-01-2022- சனிக்கிழமை

4. உழவர் திருநாள்- 16-01-2022- ஞாயிற்றுக்கிழமை

5. தைப்பூசம்- 18-01-2022- செவ்வாய்க்கிழமை

6. குடியரசு தினம்- 26-01-2022- புதன்கிழமை

7. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/கூட்டுறவு வங்கிகள்)- 01-04-2022- வெள்ளிக்கிழமை

8. தெலுங்கு வருடப் பிறப்பு- 02-04-2022- சனிக்கிழமை

9. தமிழ் புத்தாண்டு/மகாவீரர் ஜெயந்தி/டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்- 14-04-2022- வியாழக்கிழமை

10. புனித வெள்ளி- 15-04-2022- வெள்ளிக்கிழமை

11. மே தினம்- 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை

12. ரம்ஜான்- 03-05-2022- செவ்வாய்க்கிழமை

13. பக்ரீத்- 10-07-2022- ஞாயிற்றுக்கிழமை

14. மொகரம்- 09-08-2022- செவ்வாய்க்கிழமை

15. சுதந்திர தினம்- 15-08-2022- திங்கட்கிழமை

16. கிருஷ்ண ஜெயந்தி- 19-08-2022- வெள்ளிக்கிழமை

17. விநாயகர் சதுர்த்தி- 31-08-2022- புதன்கிழமை

18. காந்தி ஜெயந்தி- 02-10-2022- ஞாயிற்றுக்கிழமை

19. ஆயுத பூஜை- 04-10-2022- செவ்வாய்க்கிழமை

20. விஜயதசமி- 05-10-2022- புதன்கிழமை

21. மிலாதுன் நபி- 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை

22. தீபாவளி- 24-10-2022 திங்கட்கிழமை

23. கிறிஸ்துமஸ்- 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment