2021 ஆம் ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு பெரும் மழையை அள்ளிக் கொடுத்தது. அதன் விளைவாக தமிழகத்தில் உள்ள பெருவாரியான அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. அதோடு மட்டுமில்லாமல் விவசாய நிலங்கள் சாலைகள் வீடுகள் போன்ற பல இடங்கள் சேதமடைந்தன. இந்த வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதத்திற்கு பின்னர் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.
இந்த நிலையில் இந்த ஆண்டு மழை பொழிவு குறைந்த மாவட்டங்களில் பட்டியல் வெளியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் குறைந்த மழை பொழிய பெற்றதாக காணப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே மிக குறைந்த பட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 சதவீதம் மட்டுமே கூடுதலாக மழை பதிவானது என்று கூறப்படுகிறது.
அதற்கு அடுத்தபடியாக நாகை மாவட்டத்தில் 21 சதவீதம் கூடுதலாக மழைப்பொழிவு கிடைத்துள்ளது. மயிலாடுதுறையில் 23 சதவீதமும், திண்டுக்கல்லில் 24 சதவீதமும் இந்த ஆண்டு கூடுதலாக மழைப்பொழிவு கிடைத்துள்ளது. நீலகிரியில் 33 சதவீதமும், சேலத்தில் 34 சதவீதமும் திருவாரூரில் 38 சதவீதமும் இந்த ஆண்டு கூடுதலாக மழைப்பொழிவு கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.