ஆண்டின் முதல் நாளில் கற்பக விநாயகர் கோவிலை நாடி செல்லும் மக்கள்

இந்த வருடம் 2020 அடுத்த வாரம் பிறக்க இருக்கிறது. 2020ம் ஆண்டு மட்டுமல்ல எந்த ஆண்டின் முதல் நாளாக இருந்தாலும் சரி இந்த கோவில் சென்று ஸ்வாமி தரிசனம் செய்வது மிகவும் சிரமம்.சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர்தான் அக்கோவில்.

790e980f28e6b78a70447d1300b40187

நகரத்தார்களால் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் இக்கோவில் ஒரு குடைவரை கோவில். எந்த ஒரு விசயம் என்றாலும் முதலில் நாம் விநாயகரை வணங்கித்தான் வழிபாடு செய்கிறோம்.

பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் துவங்கு என்ற பாடல் போல ஆனைமுகனை வணங்கி வருடத்தின் முதல் நாளை துவங்கினால் அனைத்தும் நல்லவையாக நடக்கும் என்பது ஐதீகம்.

அதனால் தமிழக அளவில் விநாயகர் என்று சொன்ன உடனே முதலில் நினைவுக்கு வரும் பிள்ளையார்பட்டிக்கு மக்கள் தமிழ்நாடெங்கும் இருந்து டிசம்பர் 31லேயே வந்து விடுகின்றனர். அதிகாலை நடை திறக்கும் சமயத்தில் பக்தர்கள் குவிந்து விடுகின்றனர். மிக நீண்டதாக செல்லும் க்யூவில் பல மணி நேரம் காத்திருந்து ஸ்வாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த விநாயகர் மிக சக்தி வாய்ந்தவர் எண்ணியவற்றை முடித்து தருபவர் காரிய தடைகளை அகற்றுபவர்.

இம்மாவட்டத்தை சேர்ந்தவரான கவிஞர் கண்ணதாசன் இந்த விநாயகரை இவ்வாறு குறிப்பிடுகிறார்.

அற்புத கீர்த்தி வேண்டின்

ஆனந்த வாழ்க்கை வேண்டின்

நற்பொருள் குவிதல் வேண்டின்

நலமெலாம் பெருக வேண்டின்

கற்பகமூர்த்தி தெய்வ களஞ்சிய திருக்கை

சென்று பொற்பதம் பணிந்து வாரீர்

பொய்யிழை கண்ட உண்மை என குறிப்பிடுகிறார்.

வருடத்தின் முதல் நாள் நீங்களும் பிள்ளையார்பட்டி சென்று விநாயகரை தரிசித்து நலம் பெறுங்கள். வரிசையில் நின்று தரிசனம் செய்ய சில மணி நேரம் ஆகும் பொறுமை கடைபிடிப்பது நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews