பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2019!


d7253d9329e571dacce5108437ecf224

பிப்ரவரி மாத பலன்கள்

மேஷம்

அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு கடகத்தில் ராகு இருப்பதால் திருமணம் நடைபெறாமல் தவிப்பவர்கள் திருமணஞ்சேரி, திருவீழிமழலை உள்ளிட்ட ஸ்தலங்களுக்கு சென்று திருமண பரிகாரம் செய்து கொள்ளலாம். இராம நாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள ஆதி ஜெகனாத பெருமாள் கோவிலில் குங்கும அர்ச்சனை செய்து ஒரு மண்டலம் நெற்றியில் பொட்டிட்டு வந்தாலும் திருமணத்தடை விலகும். தாயாரின் உடல் நிலையை கவினித்து கொள்ளவும் பரணி நட்சத்திரகாரர்களுக்கு கேது சூரியன் சேர்க்கை இருப்பதால் உடல் நிலையை பார்த்து கொள்ளுதல் நலம். உடல் நலத்தில் நல்ல கவனம் தேவை . கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு எண்ணியது ஈடேறும் மாதமாக இது இருக்கிறது.

ரிஷபம்

அஷ்டமச்சனி எனப்படும் 8ல் சனி இருப்பதால் அது அவ்வளவு விசேஷமானதல்ல. அத்தை முறை உள்ளவர்களுக்கு உடல் நிலை பாதிப்பு வரலாம். இது கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு ரோகிணி நட்சத்திரக்காரர்கள் மாமனார் உதவி கிடைக்கபெறுவார்கள். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கொஞ்சம் உடல் நிலையின் கவனமுடன் இருக்கவும் மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் சுக்கிரன் சனி சேர்ந்து தனுசில் இருப்பதால் அரசு சம்பந்த பட்ட வேலைகளில் காலதாமதம் ஆகலாம். வாயில்லா ஜீவன் களுக்கு உதவி புரிதல் நலத்தை கொடுக்கும்.

மிதுனம்

 மிருகசீரிடம்;தொழில் செய்வோர் கவனமுடன் செய்யவும். திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு பண நெருக்கடி வரலாம் கொஞ்சம் கவனமுடன் இருக்கவும் அதிக செலவுகள் வேண்டாம் புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு பேங்க் லோன் போன்றவை கிடைப்பதற்கு தாமதம் ஆகலாம். பெருமாள் வழிபாடுசெய்யவும்.

கடகம்

புனர்பூச நட்சத்திரக்காரர்கள் மனைவியின் விஷயங்களில் தலைவிட்டு வாங்கி கட்டி கொள்ள வேண்டாம். அவர்களின் நியாயமான ஆசைகளுக்கு தடை சொல்லாமல் இருப்பது நலம் பயக்கும்.பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு 20 ல் இருந்து 30 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு திருமணம்   உள்ளிட்ட விஷயங்களில் நல்ல செய்தி தேடி வரும்.ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் ஆடைதானம், அன்னதானம் தருவதும், பிராமணர்களுக்கு உதவி புரிவதும் நன்மை பயக்கும்.

சிம்மம்

சிம்மத்தில் மகம் நட்சத்திரக்காரர்கள் கேதுவால் துன்பங்களை அனுபவித்து வருகிறீர்கள். நீண்ட தூர பயணங்களை குறைத்து கொள்ளுங்கள் நிம்மதி கிடைக்கும்.பூர நட்சத்திரக்காரர்களுக்கு செவ்வாயின் கெடுதல் பார்வை உள்ளதால் அங்காரகன் வழிபாடு செய்யவும் உத்திர நட்சத்திரத்தில் எழுத்து. பத்திரிக்கை தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல வருவாய் வரும் செவ்வாய்க்கிழமை முருகன் கோவில் சென்று தொடர்ந்து வழிபடுவது சிறப்பை தரும்.

கன்னி

தந்தையின் மீது மரியாதையுடன் இணக்கமாக இருக்கவும் காதுவலி, சிறு நீர் போன்ற பிரச்சினைகளில் இருந்து காத்து கொள்ளுதல் நலம் இது உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு. ஹஸ்த நட்சத்திரக்காரர்கள் பார்ட்னர் உள்ளிட்ட யாரிடமும் ஏமாறாமல் கவனமுடன் இருப்பது நல்லது. பெண்கள் துர்க்கை அம்மனை வணங்கலாம் துன்பம் இடர்ப்பாடுகள் தீரும்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு பனி, குளிர் போன்றவற்றால் உடல் ரீதியாக காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் போன்ற நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளுதல் நலம் தரும்.

துலாம்

சித்திரை நட்சத்திரக்காரர்கள் பேஸ்புக் டுவிட்டர் போன்ற தளங்களில் எதையாவது எழுதி தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்காமல் இருப்பது நலம் பயக்கும், ஸ்வாதி நட்சத்திரக்கார்கள் ராகு 10ல் இருப்பதால் அம்மாவின் உடல் நலத்தில் கவனம் தேவை. விசாகம் நட்சத்திரக்காரர்கள் துன்பங்கள் விலக காயத்ரி மந்திரம் ஜெபித்து வரவும் விநாயகர் வழிபாடு கேது பகவானுக்கு அர்ச்சனை செய்யவும்

விருச்சிகம்

விருச்சிகத்தில் விசாக நட்சத்திரக்காரர்கள் சந்திரன் ராகு சேர்க்கை சம்பந்தப்பட்டவர்கள் மனைவியுடன் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். வீண் சந்தேகம், வாக்குவாதம் முதலியவற்றை இவர்கள் தவிர்ப்பது நல்லது. அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு சுக்கிரனால் சுபச்செலவு உண்டாகும். கேட்டை நட்சத்திரக்கார்கள் நெருப்பு, விபத்து குழந்தைகள் சம்பந்தமான விஷயங்களில் கவனமுடன் இருப்பது நலம் தரும்.

தனுசு

மூலம் நட்சத்திரம் உள்ளவர்கள் தந்தையின் உதவியை இம்மாதம் பெற மாட்டார்கள். எதிர்மறை தரும் வியாபாரங்களில் கவனம் செலுத்தாமல் இருப்பது நல்லது. பூராடம் நட்சத்திரக்கார்களில் விவசாயிகளுக்கு நல்ல செய்திகள் லாப செய்திகள் வரும் பறவைகள் விலங்குகளுக்கு உதவவும்.உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு செவ்வாய் மீனத்தில் இருப்பதால் பூர்விக சொத்து வந்து சேரும். ரத்த அழுத்தம் ஆஸ்துமா வியாதிகளில் இருந்து காத்து கொள்ளவும்.

மகரம்

உத்திராடம் நட்சத்திரக்காரகளுக்கு நல்ல மாற்றங்கள் வரக்கூடிய மாதமிது. தந்தையின் மீது கவனம் வைக்கவும் தந்தையை தவறாக பேசாமல் வாதம் புரியாமல் இருப்பது நலம் பயக்கும். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபட சனீஸ்வர வழிபாடுகள், அவரின் மந்திரங்களை உச்சரிப்பது நல்லது.

அவிட்ட நட்சத்திரக்காரர்கள்

நல்ல எண்ணங்களை அதிகப்படுத்துங்கள்  தீய எண்ணங்கள் இருந்தால் குறைத்து கொள்ளுங்கள்.

கும்பம்

அவிட்டம் நட்சத்திரத்தினர் எதிலும் தடம்புரளாமல் பார்த்து கொள்ளுங்கள். மந்திரங்கள் வழிபாடுகளை  ஏனோ தானோவென்று செய்யாமல் சரியான முறையில் முழுமையாக செய்ய வேண்டும்.சனீஸ்வர வழிபாடு செய்யவும்.சதய நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் இடத்தில் குரு இருப்பதால் மிகுதியான லாபம் கிடைக்கலாம் அரசமரம் சுற்றுதல் தண்ணீர் விடுதல் நலம்.

பூரட்டாதி நட்சத்திரக்கார்கள் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறலாம் கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் சிம்மராசியினரோடு இணக்கமாக இருப்பது நல்லது.

மீனம்

தங்கள் பிள்ளைகள் மீது கவனம் வைக்கவும் பிள்ளைகளை வாகனம் ஓட்ட சொல்லும்போது கவனமுடன் ஓட்ட சொல்லவும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வீண் விரய செய்யும் எண்ணங்கள் வரும் குரைத்து கொள்ளவும் நீண்ட தூர பயணங்களை குறைப்பது நல்லது.

ரேவதி நட்சத்திரக்காரர்களில் உள்ளவர்கள் மது அருந்தும் பழக்கம் இருந்தால் குறைத்து கொள்ளவும். காலில் செருப்பில்லாமல் சென்று சனி பகவானை வணங்கி வரவும்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews