200 நாட்களுக்கு பின் வெறிச்சோடிய நகரங்கள்- முழு ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடந்த 2019ம் ஆண்டு  சீனாவின் வூகான் நகரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் மக்களை வாட்டி வதைத்து  பூட்டி புதைத்து வருகிறது என்றே சொல்லலாம் கொடுமை என்றால் இந்த கொரோனா போல் கொடுமை இல்லை என சொல்லும் அளவுக்கு இந்த கொரோனாதான் மனித உலகில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு அசுர சக்தியாக வளர்ந்து நிற்கிறது.

இந்த நிலையில் கடந்த 2019 முதல் தொடர்ந்து வதைத்து வரும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக  தொடர்ந்து பல முறை ஊரடங்கு போடப்பட்டு உள்ளது.

கடந்த 2021 மே, ஜூன், ஜூலை மாதங்களில் இந்தியாவில் பரவிய டெல்டா கொரோனா வைரஸால் பல மதிப்புமிக்க உயிர்கள் போயின.

மக்களை காக்கும் பொருட்டு முதலில் ஞாயிற்றுக்கிழமை லாக் டவுனும் பின்னர் தொடர்  லாக் டவுனும் போடப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா விலகிய பின்னர் லாக் டவுன் சிறிது சிறிதாக தளர்த்திக்கொள்ளப்பட்டு தற்போதுதான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். அதற்குள் மீண்டும் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிக அளவில் இருந்து வருவதால் மீண்டும் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை மட்டும்  லாக் டவுன் இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளதால் பல பெரு நகரங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.

சென்னை, மதுரை, சேலம், கோவை, திருச்சி, நெல்லை, வேலூர், ஈரோடு,தஞ்சாவூர், நாகர்கோவில், என தமிழ்நாட்டின் பெருநகரங்கள் பல லாக் டவுனால் கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு வழக்கமான இயல்பு நிலையில் இருந்து மாறி காட்சி அளிக்கின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment