Connect with us

நாளைய தினம் இலக்கே:”20000 மையங்கள் மற்றும் 15 லட்சம் தடுப்பூசிகள்!!”

News

நாளைய தினம் இலக்கே:”20000 மையங்கள் மற்றும் 15 லட்சம் தடுப்பூசிகள்!!”

c35c3f8af297f80c932b238b22067d11

தற்போது இந்திய அளவில் பல மாநிலங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்வோர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. மேலும் தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது என்றே கூறலாம். இதனால் தமிழகத்தில் பெரும்பாலும் பல பகுதிகளில் தடுப்பூசி தொடர்ச்சியாக போடப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் கூட தடுப்பூசி மீது அதிக ஆர்வம் கொண்டு போட்டுக் கொண்டே வருகின்றனர்.774406e4bc6597d98e9d870b99cc4007

சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள சுப்பிரமணியன் நாளைய  தினம் நடைபெற உள்ள தடுப்பூசி பற்றிய சில முக்கிய அறிவிப்புகளை வழங்கியுள்ளார். அதன்படி தமிழகத்தில் நாளை நடக்கும் மூன்றாவது சிறப்பு முகாமில் 20 ஆயிரம் மையங்களில் 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கினை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கோவாக்சின்  மற்றும் கோவிஷீல்டு போடப்பட உள்ளதால் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மேலும் சென்னையில் நாளையதினம் மட்டும் 1600 மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் இந்த முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. இதனால் நாளைய தினம் தமிழகத்தில் பெரிய இலக்காக உள்ள நிலையில், நாளைய தினம் அதிக பேர் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top