2000 ரூபாய் நிவாரணம்: ரொக்கமாக வழங்குவதா? பொருள்களாக வழங்குவதா?

தற்போது தமிழகத்தில் கன மழை அடித்துப் பெய்தது. இதனால் பல மாவட்டங்களில் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் பெய்த கன மழையால் சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

மழை

இதனால் மக்கள் மிகவும் இன்னல் படுகின்றனர். இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது நிவாரண தொகையாக 2000 ரூபாய் வழங்கப்படுவது உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி  சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை நீரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிவாரணத் தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இதுபோன்ற மழை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு 5000 ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த பணம் ரொக்கமாக வழங்குவதா? அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்கள் அடிப்படையில் வழங்குவதா? என்பது குறித்து தீவிர பரிசீலனையும் ,ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment