சூர்யா பட பாணியில் கொள்ளை; அதிகாரிகள் போல் வேஷமிட்டு 200 சவரன் அம்பேல்!!
தற்போது உள்ள காலகட்டத்தில் கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்து கொண்டு வருகிறது. அதுவும் நூதன கொள்ளைகள் ஏராளமாக நம் தமிழகத்திலேயே நிகழ்கிறது. குறிப்பாக வீடுகளில் திருடர்கள் கைவரிசை காட்டுவது, சாலைகளில் செயின் பறிப்பு உள்ளிட்ட கொடூர சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில் அதிகாரிகள் போல் வேஷம் அணிந்து நூற்றுக்கணக்கில் சவரன் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளதாக காணப்படுகிறது.
அதன்படி திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை அருகே வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து ஒப்பந்ததாரர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்பேட்டை பகுதி அருகே உள்ள வெள்ளகுளம் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் பாலமுருகன் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
ஒப்பந்ததாரர் வீட்டில் 200 சவரன் நகை மற்றும் ரூபாய் இரண்டு லட்சம் பணத்தை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றனர். சினிமா பாணியில் வந்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களுக்கு செவ்வாய்பேட்டை போலீஸ் வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறது.
