இரண்டு ஆண்டுகளாக மாணவர்களின் கல்வி பாதிப்பு; சீர்செய்யும் வகையில் 200 கல்வி டிவி சேனல்கள்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா முழுவதும் ஆன்லைன் ராஜ்ஜியம் தான் காணப்படுகிறது. இவை பள்ளிகள், கல்லூரிகள் தாண்டி அரசு அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலமாக பணி செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் ஆன்லைன் மூலமாக படிக்கின்றனர். தமிழகத்தில் இன்று தான் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அரசாங்கத்தின் சார்பில் கல்வி சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இருப்பினும் கல்வியில் பாதிப்பு அதிகமாகத்தான் காணப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் இன்று பட்ஜெட் தாக்கலில் கல்வி பாதிப்பை சீர் அமைக்க 200 சேனல்கள் கொண்டு வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி ஒரு வகுப்புக்கு ஒரு கல்வி சேனல் என்ற வகையில் மொத்தம் 200 டிவி சேனல்கள் புதிதாக உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாததால் கற்பதில் ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்ய இந்த புதிய திட்டம் உதவும் என்றும் அவர் கூறினார்.
