Connect with us

குயின்ஸ் லேண்ட்! ஆக்கிரமிக்கப்பட்ட 200 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு;

queens

தமிழகம்

குயின்ஸ் லேண்ட்! ஆக்கிரமிக்கப்பட்ட 200 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு;

சென்னை பூந்தமல்லியில் இருக்கும் பொழுது போக்கு பூங்காவான குயின்ஸ் லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 31 ஏக்கர் 41 சென்ட் நிலமானது மீட்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததாக குயின்ஸ் லேண்ட் நிறுவனத்திற்கு புகார் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் வழக்கு விசாரணையானது நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் மீட்கப்பட்ட இடத்தில் ரோப் கார்கள் இருக்கும் நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே 32 ஏக்கர் நிலமும் அறநிலையத் துறைக்கு சொந்தமானது என வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும், இந்த நிலமானது வருவாய்த்துறைக்கு சொந்தமானது என அந்நிறுவனத்தினர் பதில் அளித்ததால் வழக்கு நிராகரிக்கப்பட்டது.

இந்த சூழலில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மீட்கப்பட்ட நிலங்களின் விலை ஏறக்குறைய 200 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top