பயிர்க்கடன் திட்டத்திற்கு 200 கோடி.! ‘அம்ருத்’ திட்டத்தின் கீழ் வீடு கட்ட 2030 கோடி ஒதுக்கீடு..!!
இன்றைய தினம் தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தில் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தற்போது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இதனை தமிழகத்தின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். இதில் கல்வி, மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட பலவகையான நிதி ஒதுக்கீடு பற்றி அவர் அறிவித்து வருகிறார்.
அதிலும் குறிப்பாக பயிர் கடன் திட்டத்திற்கு ரூபாய் 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதன்படி வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
பயிர் கடன் தள்ளுபடி 2531 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். அதோடு மட்டுமல்லாமல் ஏழை மக்களுக்கு அம்ருத் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்ட தமிழக அரசின் பங்காக ரூபாய் 2030 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ரூபாய் 22647 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். நகர்ப்புறப் பகுதிகளில் பசுமையாக மாற்ற 500 பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார் .
இதன் முதல் கட்டமாக 149 சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும் என்றும் அதற்கு ரூபாய் 190 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.
