ஒரு பீர் பாட்டிலுக்கு 20 ரூபாயா? – அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

காஞ்சிபுரத்தை அடுத்த ராஜகுளம் பகுதியில் அரசு மதுபான கடையில் மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20 ரூபாய் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நம் தமிழகத்தை பொறுத்த வரையில் 5,380 டாஸ்மாக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்து 3,240 பார்கள் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் மது விற்பனை என்பது அதிகமாகவே இருக்கும்.

14 வயது மாணவிக்கு ஆண் குழந்தை: ஜார்கண்ட்டில் பரபரப்பு!!

அந்த வகையில் ராஜகுளம் பகுதியை சேர்ந்த ஒருவர் 140 ரூபாய் விலை மதிப்பில் பீர் பாட்டிலை வாங்கி உள்ளார். அப்போது டாஸ்மார்க் ஊழியர் கூடுதலாக ரூ.20 ரூபாய் கேட்டு இருக்கிறார். இதனால் அதிர்ச்சியைந்த மது பிரியர் கடையில் பணியாற்றும் ஊழியருடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு உள்ளார்.

அப்போது இதனை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என கூறினார். ஆனால் டாஸ்மாக் ஊழியரோ சிறிதும் அச்சமின்றி பதிவிட்டுக்கொள் என கூறி ரூ.10-யை திருப்பி கொடுத்தாக தெரிகிறது.

புத்தாண்டு! போதையில் வாகனம் ஓட்டினால் கைது- காவல்துறை எச்சரிக்கை!!

இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதே போல் இது போன்ற சம்பவங்கள் பல்வேறு கடைகளில் தொடர்ந்து நடைப்பெற்று வருவதால் டாஸ்மார்ட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.