காது குத்து விழாவில் அரங்கேறிய பயங்கரம்; விஷத் தேனீக்கள் கொட்டியதால் 20 பேருக்கு தீவிர சிகிச்சை!

பண்ருட்டி அருகே கோவிலில் காது குத்தும் நிகழ்ச்சியின் போது விஷத் தேனீக்கள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சேர்ந்த முரளி – நித்தியா தம்பதியின் இரண்டு மகன்களுக்கும் பண்ருட்டி அடுத்த திராசு பகுதியில் உள்ள சிவன் கோயிலில் மொட்டை அடித்து காது குத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது சிறுவர்களுக்கு மொட்டை அடித்துக் கொண்டிருக்கும் பொது உறவினர்கள் சிலர் அடுப்பை மூட்டி படையலுக்கு தேவையான பொங்கல் சமைத்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது அடுப்பில் இருந்து வெளியேறிய புகைமூட்டம் அருகில் இருந்த மரத்தை அடைந்த போது, எதிர்பாராத விதமாக மரத்திலிருந்த விஷத் தேனீக்கள் அங்கு இருந்தவர்களை கொட்ட ஆரம்பித்தன.

தேனீக்களால் கடிபட்ட 20க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பண்ருட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment