தேர்தல் பறக்கும் படை சோதனையில் 2½ லட்சம் பறிமுதல்!!

தமிழகம் முழுவதும் வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டு அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரம் காட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியில் செங்கோட்டை யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொண்டல்சாமி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முகமது கனி, போலீஸ்காரர் ரமேஷ் ஆகியோர் தீவிர வாகன சோதனை ஈடுப்பட்டனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில்  வந்த ஒருவரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுப்பட்டனர். அதில் சுமார் ரூ. 2½ லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரனையில் ராஜபாளையம் அருகே உள்ள முறம்பை அடுத்த சோழபுரத்தை சேர்ந்த முத்து என்பதும் தொழில் சம்பந்தமாக பணத்தை எடுத்து செல்வதாக கூறினார்.

ஆனால் உரிய ஆவணம் ஏதும் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அந்த பணத்தை கடையநல்லூர் நகராட்சி கமி‌ஷனர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment