நம் தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதுவும் இந்த செயலில் பெரும்பாலும் படித்த பட்டதாரிகள் முயற்சிப்பது வேதனையான ஒன்றாக மாறி உள்ளது.
ஏனென்றால் அவர்கள் தங்களின் அறிவை இதில் பயன்படுத்தி தவறான பாதையில் செல்கின்றனர். மேலும் அதிக அளவு வீட்டில் ஆளில்லாத நேரத்தில் நோட்டமிட்டு பீரோவில் உள்ள நகை பணத்தினை கொள்ளை அடிக்கும் சம்பவம் நடைபெறுகிறது.
அதேபோன்று மதுரையில் ரூபாய் 20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மதுரையில் கேட்டரிங் தொழில் செய்து வருபவர் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்து 20 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 40 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் சங்கரநாராயணர் திருச்சி சென்றிருந்தபோது கொள்ளையர்கள் வீட்டின் நோட்டமிட்டு கைவரிசை காட்டி உள்ளனர். மதுரை வசந்த நகரில் உள்ள சங்கரநாராயணன் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களுக்கு போலீசார் வலை வீசி தேடிக் கொண்டுள்ளனர்.