2025- ஆம் ஆண்டுக்குள் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு !! முதலமைச்சர்
ஐ.டி தகவல் தொழில்நுட்பத் துறையில் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் டி.எல். எஃப் கட்டிட அலுவலக வளாகத்திற்கு முதலமைச்சர் மு .க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சுமார் இருபத்தி ஏழு ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் வளாகத்தில் ரூ. 5000 கோடி முதலீட்டில் டி.எல்.எஃப் நிறுவனம் புதிய செயல்திட்டங்களை செயல்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் 2025 ஆம் ஆண்டிற்குள் ஐ.டி ஐடி தகவல் தொழில்நுட்பத் துறையில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறினார்.
கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்திய மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து மதுரை ஆவின் தொழிற்சாலையில் 30, 000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
