6 எஸ்பிக்கள் உள்பட காவல்துறை உயரதிகாரிகள் 20 பேர் அதிரடி மாற்றம்..!

நிர்வாக வசதிக்காகவும் ஐபிஎஸ் அதிகாரிகளின் வேண்டுகோளுக்காகவும் அவ்வப்போது ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப் படுவார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின் படி 6 மாவட்டங்களுக்கு புதிய எஸ்பிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் 20 காவல்துறை உயர் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

இந்நிலையில் இடமாற்றம் செய்யப்பட்ட 20 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் பின்வருமாறு:

*குடிமைப் பொருள் விநியோக சி.ஐ.டி. டி.ஜி.பி. அபஷ்குமார் ஐ.பி.எஸ். தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* டி.ஜி.பி. ப்ரஜ்கிஷோர் ரவி ஐ.பி.எஸ். குடிமைப் பாதுகாப்பு, ஊர்க் காவல்படை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை, தலைமை அலுவலக ஏ.டி.ஜி.பி. வெங்கட்ராமன் ஐ.பி.எஸ்., நிர்வாக ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* அமலாக்கத்துறை ஐ.ஜி. ஆசியம்மாள், ஐ.பி.எஸ். பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* மதுரை காவல் ஆணையர் செந்தில்குமார் ஐ.பி.எஸ். சென்னை ஐ.ஜி. (பொது) நியமிக்கப்பட்டுள்ளார்.

* திருப்பூர் நகர காவல் ஆணையர் பிரபாகரன் ஐ.பி.எஸ். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* கோயம்புத்தூர் சரக டி.ஜ.ஜி. எம்.எஸ். முத்துசாமி ஐ.பி.எஸ். வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. கயல்விழி ஐ.பி.எஸ். சென்னை கடலோர காவல்படை டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை கடலோர காவல்படை டி.ஐ.ஜி. சின்னசுவாமி ஐ.பி.எஸ். சென்னை தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* தூத்துக்குடி காவல் சீருடைப்பள்ளி முதல்வர் எம்.ராஜராஜன், சென்னை பெருநகர உயர்நீதிமன்ற காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* எஸ்.பி. பிரபாகர் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிககப்பட்டுள்ளார்.

* சென்னை, தலைமையக துணை ஆணையர் செந்தில்குமார் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* தர்மபுரி எஸ்.பி. கலைச்செல்வன் ஐ.பி.எஸ். நாமக்கல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை, சி.ஐ.டி. சிறப்பு பிரிவு எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபதம், தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை குற்றப்பிரிவு சி.ஐ.டி. எஸ்.பி. முத்தரசி, தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* தஞ்சை எஸ்.பி. ரவளிபிரியா ஐ.பி.எஸ். சென்னை, குற்றப்பிரிவு சி.ஐ.டி. எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை மாநில காவல் நவீன கட்டுப்பாட்டு அறை எஸ்.பி. ஜெயலட்சுமி ஐ.பி.எஸ். ஆவடி போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
.
* சென்னை ரயில்வே எஸ்.பி. உமா ஐ.பி.எஸ். சென்னை சட்டம் – ஒழுங்கு ஏ.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* தமிழ்நாடு காவல் அகாடமி துணை இயக்குனர் சிவகுமார் ஐ.பி.எஸ். சேலம் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை, சட்டம் ஒழுங்கு ஏ.ஐ.ஜி. அர அருளரசு ஐ.பி.எஸ். சி.ஐ.டி. சிறப்பு பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.