ஒரே நேரத்தில் சிவாஜியின் 20 படங்கள் ஓடி அசத்தல் சாதனை!

பி மாதவன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஞான ஒளி. வெகுஜன மக்களுக்கு இந்த படம் விளைவித்த தாக்கம் மிகவும் அதிகமானது. ஞான ஒளி திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1972. இந்த படம் வெளிவந்த சமயத்தில் சென்னையில் சிவாஜியின் படங்கள் ஒரு மகத்தான சாதனை செய்தது. அந்த சாதனை ஒரு சாதாரணமான சாதனை கிடையாது.

ஞான ஒளி 1972 ஆம் ஆண்டு சென்னையில் நான்கு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அந்த காலத்தில் ஒரு நடிகரின் ஒரு படம் ஒரு திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் போது சில சமயங்களில் அந்த நடிகரின் அதற்கு முன் வெளியான பழைய திரைப்படங்கள் இரண்டு அல்லது மூன்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும். மிகவும் பிரபலமான நடிகர் என்றால் நான்கு அல்லது ஐந்து திரையரங்குகளில் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும்.

அது அந்த காலத்தில் வழக்கமான ஒன்று தான். ஆனால் நடிகர் திலகத்தின் ஞான ஒளி திரைப்படம் வெளிவந்த அந்த 1972 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒரே சமயத்தில் சென்னை நகரில் மட்டும் நடிகர் திலகத்தின் பல திரைப்படங்கள் ஓடிக்கொண்டிருந்தன என்பதுதான் வியக்க வைக்கும் உண்மை.

ஞான ஒளி படத்தின் தயாரிப்பாளர் இந்த தகவலை ஒரு பத்திரிக்கையில் விளம்பரமாக வெளியிட்டுள்ளார். இது ஒரு அதிகாரப்பூர்வமான தகவல் ஆகும். மேலும் அந்த 20 திரைப்படங்கள் என்ன என்ன என்பதை அந்த பத்திரிகை விளம்பரத்தில் படத்தின் தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். என்னென்ன படங்கள் ஓடிக்கொண்டிருந்தன என்பதை பார்க்கலாம்.

பாச மலர் 2 தியேட்டர்கள், உத்தம புத்திரன், பாக விரிவினை 6 தியேட்டர்கள், துக்கு தூக்கி, குங்குமம், வணங்கா முடி,வளர் பிறை, இருவர் உள்ளம், ராஜா ஐந்து தியேட்டர்கள். மக்களைப் பெற்ற மகராசி, தங்கைக்காக, சொர்க்கம், தேனும் பாலும், காவிரி, பாபு , மனோகரா, குலமகள் ராதை நான்கு தியேட்டர்கள். பாலும் பழமும் இரண்டு தியேட்டர்கள். உயர்ந்த மனிதன், புதிய வெளியீடான ஞான ஒளி 4 தியேட்டர்கள் என சிவாஜியின் படங்கள் வியக்கும் சாதனை படைத்தது.

இந்த சாதனை ஒரு பக்கம் இருந்தாலும் சென்னையில் இருந்த சபாக்களும் ஞான ஒளி படத்தை திரையிட்டு ஒரு பெரும் சாதனை செய்தது. அது என்னவென்றால் அப்போதெல்லாம் புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது அந்த திரைப்படங்களை திரையரங்குகளில் வாடகைக்கு எடுத்து வெளியிட்டு அதன்மூலம் வருமானம் பார்த்தார்கள். அப்படி சென்னையில் உள்ள சபாக்களில்  திரையரங்குகளில் இரண்டு நாட்களும் சேர்த்து கிட்டத்தட்ட 55 காலை காட்சிகளாக ஞான ஒளி திரைப்படத்தை வெளியிட்டது எந்த நடிகராலும் கற்பனை செய்து பார்க்க முடியாத விஷயமாக இருந்தது.

முதல் இரண்டு நாட்களில் 55 காலை காட்சிகள் நடந்தது. இப்படம் வெளியானபோது போட்டியாக நகரின் முழுவதிலும் கிட்டத்தட்ட 20 நடிகர்கள் படங்கள் என்று இந்த சோதனைகள் அனைத்தையும் தாண்டி ஞான ஒளி திரைப்படம் பெற்ற வெற்றி தமிழ் திரையுலக வரலாற்றில் எவராலும் நடந்திருக்க முடியாத மிகப்பெரிய சாதனை.

ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் 6 மாத கால இடைவெளி விடாமல் ஆறு வாரத்துக்குள்ளாகவே அடுத்த படம் வெளியிட்டு வெற்றி பெறக் கூடிய வலிமை நடிகர் திலகத்திற்கு மட்டுமே சாத்தியமான ஒன்று. அப்படி பார்த்து ஞான ஒளி திரைப்படத்தின் வெற்றியை தமிழ் திரை உலக வரலாறு காணாத வெற்றி இதுதான் என்று சொல்ல வேண்டும்.

1971 ஆம் ஆண்டில் இறுதியில் புகழின் உச்சியில் நடிகர் திலகம் கொடி கட்டி பறக்க அந்த நேரத்தில் விரைவில் ஞான ஒளி திரைப்படம் வெளியிடப்படும் என்கிற செய்தி பரவத் தொடங்கியது. அதற்கு ஏற்றார் போல அருணாலயம் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த போதே தேவனே என்னை பாருங்கள் பாடல் சென்னை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஓரிரு மாதங்கள் கழித்து இந்த பாடல் இலங்கை வானொலியிலும் ஒளிபரப்பப்பட்டது. பாபு படம் வெளியான போது தேவனே என்னை பாருங்கள் பாடல் மிகப் பிரபலமாக மாறி எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டது. ராஜா படம் வெளியீட்டின் போது இது பரபரப்பாக பேசப்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராஜா திரைபடம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போது பிளாசாவின் ஞான ஒளி வெளியீடு செய்யப்பட்டது.

சீரியலா வேண்டவே வேண்டாம் என ஓட்டம் எடுத்த விஜய்யின் அப்பா!

ஞான ஒளி ரிலீஸின் போது சென்னை நகரில் 6 வாரங்களில் ஏறக்குறைய 80 சதவீத தியேட்டர்களில் நடிகர் திலகத்தின் 20க்கும் மேற்பட்ட படங்கள் புதிய முறையில் விளம்பரம் செய்யப்பட்டு திரையிடப்பட்ட போதிலும் நகரில் எல்லைக்கு அருகில் சுற்றுப்புறங்களில் உள்ள டூரிங் சினிமாக்களில் எல்லாம் திரையிடப்பட்டும், சென்னையில் ஐந்து திரையரங்குகளில் ரிலீஸ் செய்தும், 30க்கு மேற்பட்ட சங்கீத சபாக்களில் மூலமாகவும் 2 நாட்களில் 36,000 ரசிகர்கள் இந்த படத்தை கண்டு கழித்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews