News
மன்னார்குடியில் 20 கோடி மதிப்பிலான தங்க வைர நகைகள்!
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் ஆனது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தற்போது வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் மத்தியில் அவர்கள் உரிய ஆவணம் இல்லாத நகைகளையும், பணத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வைர நகைகள் டெம்போவில்கொண்டு செல்லப்பட்டது.மேலும் தங்க வைர நகைகள் 65 கிலோ உள்ளதாகவும்தகவல் வெளியானது. தேர்தல் பறக்கும் படையினர் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் கைப்பற்றினர்.
