20 கோடி ரூபாய் மதிப்பில் பள்ளிக்கரணையில் சூழல் பூங்கா! பாரதி நினைவு நூற்றாண்டு விருது!!

நம் தமிழகத்தில் முதலமைச்சர்  ஸ்டாலின் தினம்தோறும் காணொலி வாயிலாக பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதன் வரிசையில் தற்போது சென்னை பள்ளிக்கரணையில் சூழல் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

அதன்படி சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சூழல் பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்தார். 2.5 ஹெக்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள பூங்காவை காணொலியில் திறந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

சதுப்புநில விவரங்களை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் ஸ்டாலின் பல விருதுகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாரதியார் நினைவு நூற்றாண்டு விருதுகளை வழங்கினார் ஸ்டாலின். சீனிவாசன், மணிகண்டன் ஆகியோருக்கு தலா 3 லட்சத்து உடன் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.

பாரதியார் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் ஆய்வு செய்ததால் இரண்டு பேருக்கும் விருது வழங்கப்பட்டது. மறைந்த அறிஞர்கள் தூரன், இளசை மணியன், அனந்த பத்மநாபன், ரகுநாதன் குடும்பத்துக்கும் தலா 3 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment