Connect with us

20 மாநகராட்சிக்கு மேயர்கள்: சொல்லி வைத்தபடி பட்டியலை வெளியிட்ட திமுக

திமுக

தமிழகம்

20 மாநகராட்சிக்கு மேயர்கள்: சொல்லி வைத்தபடி பட்டியலை வெளியிட்ட திமுக

20 மாநகராட்சிக்கு மேயர்கள்: சொல்லி வைத்தபடி பட்டியலை வெளியிட்ட திமுக

தற்போது 20 மாநகராட்சியில் திமுக சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பிரியா போட்டியிட உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. 340 வருட சென்னை மாநகராட்சி வரலாற்றில் இளம்வயது மாநகராட்சி மேயர் வேட்பாளர் பிரிய ராஜன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆவடி மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயகுமார் போட்டியிடுவதாக திமுக அறிவித்துள்ளது. மதுரை மாநகராட்சி மேயராக அதிமுக சார்பில் இந்திராணி போட்டியிடுகிறார். திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் அன்பழகன் போட்டியிடுகிறார்.

நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் சரவணன் போட்டியிடுகிறார். கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் கல்பனா போட்டியிடுகிறார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் ஜெகன் போட்டியிடுகிறார்.

கடலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் சுந்தரி போட்டியிடுகிறார். சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் தினேஷ்குமார் போட்டியிடுகிறார். இந்த தினேஷ்குமார் ஆஸ்திரேலியாவில் முதுகலைப்பட்டம் பெற்ற மேயர் வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் நாகரத்தினம் போட்டியிடுகிறார். தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவிக்கு வசந்தகுமாரி கமலக் கண்ணனை அறிவித்துள்ளது திமுக என்பதும் குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் மகாலட்சுமி யுவராஜ் போட்டியிடுகிறார். தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் ராமநாதன் போட்டியிடுகிறார்.

திண்டுக்கல் மாநகராட்சி மேயர் பதவிக்கு இளமதி போட்டிருக்கிறார். கரூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் கவிதா கணேசன் போட்டியிடுகிறார். சிவகாசி மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் சங்கீதா இன்பம் போட்டியிடுகிறார்.

நாகர்கோவில் மகேஷ் மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடுகிறார் ஓசூர் சத்யா மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடுகிறார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top