Connect with us

புதுச்சேரி ஆரோவில் 20 பழங்கால சிலைகள் பறிமுதல்!!

statues

தமிழகம்

புதுச்சேரி ஆரோவில் 20 பழங்கால சிலைகள் பறிமுதல்!!

புதுச்சேரி ஆரோவில்லில் பிரெஞ்சு நாட்டவருக்கு சொந்தமான இடத்தில் இருந்து 20 பழங்கால சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிலைகளை மீட்கும் பணியில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் இருக்கும் ஆரோவில் பழம்பெரும் சிலைகள் இருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது பிரெஞ்சு நாட்டவருக்கு சொந்தமான இடத்தில் சுமார் 20 பழங்கால சிலைகள், கலைப்பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர்.

பின்னர் சிலைகளை மீட்ட போலீசார் சிலைகள், கலைப்பொருட்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top