Connect with us

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது குழந்தை பலி!

noodles

Tamil Nadu

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது குழந்தை பலி!

கடந்த சில நாட்களாகவே பாஸ்ட்புட் சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. அந்த வகையில் திருச்சியை சேர்ந்த 2 வயது சிறுவன் நூடுல்ஸ் சாப்பிட்டு உணவு ஒவ்வாமையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் காலக்குடியை சேர்ந்த சாய் தருன் என்ற 2 வயது சிறுவனுக்கு சில நாட்களுக்கு முன் அலர்ஜி ஏற்பட்டதால் பெற்றோர்கள்  மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தாய் நுடுல்ஸ் சமைத்து கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் மீதமுள்ளவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் காலை அதனை சாப்பிடக்கொடுத்ததாக தெரிகிறது.

இதனிடையே மாலை வரையில் சோர்வாக இருந்த சாய் தருன் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததாக தெரிகிறது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே உடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு துரித உணவான நூடுல்ஸை சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஆகி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

மேலும், உணவை சமைத்து இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு தான் காற்று புகாதவாறு பெட்டியில் அடைக்க வேண்டும் எனவும் மீண்டும் அதனை சாப்பிடும் முன் சூடுபடுத்தி பரிமாற வேண்டும் எனவும் உணவு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top