2 தடுப்பூசி சான்று இல்லாதவர்கள் சென்னை மின்சார ரயிலில் செல்ல நேற்று முதல் தடை

கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பல கட்டுப்பாடுகளை சுகாதாரத்துறையும் தமிழக அரசும், இந்திய அரசும் செய்து வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி அனைவரும் கண்டிப்பாக போட்டிருக்க வேண்டும் என பொது இடங்கள் பலவற்றுக்கு செல்ல கொரோனா சான்றிதழ் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் உட்பட சில கோவில்களில் கொரோனா ஊசி இரண்டு ஊசி போட்டதற்கான சான்றிதழ் இல்லாமல் யாரையும் அனுமதிப்பதில்லை.

இந்த நிலையில் நேற்று முதல் சென்னை புறநகர் ரயிலில் 2 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று இல்லாத 2,177 பேருக்கு நேற்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்களில் பயணிக்க நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment