தீபாவளி புத்தாடையுடன் 2 பள்ளி மாணவிகள் மாயம்… திண்டுக்கலில் பரபரப்பு!!

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் 12-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் கடிதம் எழுதி வைத்துவிட்டு திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த 2 பிளஸ் 2 மாணவிகள் திடீரென மாயமாகியுள்ளனர். இவர்கள் நேற்று மாலை வழக்கம் போல் டியூசன் செல்வதாக கூறிவிட்டு மாயமாகியுள்ளனர்.

மழைநீர் வடிகால் பணி… தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி!!

இதனிடையே நீண்ட நேரமாகியும் மாணவிகள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர் சோதனை நடத்தியதில், தீபாவளிக்காக வாங்கி வைத்திருந்த புத்தாடைகளை தங்களுடன் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

அதோடு மாணவிகள் எழிதி வைத்த கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது. அதில் அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள்…என்னை தேட வேண்டாம் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!

இந்நிலையில் காவல்நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், 2 மாணவிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment