ஒரே இடத்தில் தரையிறங்கிய இரண்டு விமானங்கள்-2 பேர் உயிரிழப்பு.!!

பொதுவாக விபத்து என்பது சாலைகளில் நாம் கண்முன்னே பார்த்திருப்போம் அல்லது ஒரு சில இடங்களில் செய்திகள் வாயிலாக அறிந்திருப்போம். பெரும்பாலும் சாலை விபத்துக்கள் நிகழ்ந்தால் அங்கு காயங்கள் அல்லது மரணம் ஏற்படும்.

ஆனால் தற்போது வானத்தில் விபத்து ஏற்பட்டு பயணித்தவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அதன்படி அமெரிக்காவில் வானத்தில் பறந்த இரண்டு விமானங்கள் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இரண்டு சிறிய விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட செஷ்ணா 340 விமானத்தில் இரண்டு பேரும் ,ஒற்றை எஞ்சின் கொண்ட செஷ்ணா 152 விமானத்தில் ஒருவரும் பயணம் செய்துள்ளனர்.

இரு விமானங்களும் வாட்சன் வில்லி நகரில் ஒரே நேரத்தில் தரையிறங்க முயன்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வானத்தில் பறந்து தரையிறங்க முயன்ற இரண்டு விமானங்கள் மோதி அதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பலரும் அறியாத விஷயமாகவே அமைந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment