Connect with us

புதுவையில் சோகம்! அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த 2 பேர் பலி…

death

Tamil Nadu

புதுவையில் சோகம்! அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த 2 பேர் பலி…

புதுச்சேரியில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அடுத்த அக்ரஹாரத்தில் உள்ள பகுதிகளில் மிகவும் குறுகிய சாலைகள் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த வீட்டின் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததாக தெரிகிறது.

இந்த சூழலின் மின் கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் 31 வயதான தேன்மொழி மின் கம்பியை மிதித்த நிலையில் அவரை மீட்பதற்காக 17 வயதான கணேசன் உட்பட 4 பேர் மீட்பதற்கு சென்றபோது 4 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்பு படையினர் மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து சென்றனர். இதில் தேன்மொழி, கணேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் செல்வி மற்றும் சரண்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.

இதனிடையே உயிரிழந்த இருவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி கூட்டத்தை கலைத்தனர். புதுச்சேரியில் மின்கம்பம் அறுந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top