சமீப காலமாக இந்தியாவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வலம் வந்தது கொரோனா. இந்த கொரோனா தற்போது ஒமைக்ரான் என்ற வடிவத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தென் ஆப்பிரிக்க நாட்டில் தோன்றி பிரிட்டன், இஸ்ரேல், பிரேசில், போன்ற பல நாடுகளுக்கு ஒமைக்ரான் பரவி உள்ளது.
இதனால் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் விமான நிலையத்திலேயே ஒமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தபடுகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் உள்ள ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால் தமிழகத்தில் ஒமைக்ரான் பரவ தொடங்கிவிட்டது என மக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் சென்னையில் ஒரு சிறுமிக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி இந்த சிறுமி பிரிட்டன் நாட்டில் இருந்து வந்தவர் என்பதும் அவரோடு 8 பேர் பிரிட்டன் நாட்டில் இருந்து வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எட்டு பேர் அடங்கிய இரண்டு குடும்பங்களில் இந்த ஒமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சிறுமி உட்பட மற்றொரு நபருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.